June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

மாணவி தற்கொலை பற்றி சான்றோர் நாடார் சங்கம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

1 min read

Chandor Nadar Sangam complains to Superintendent of Police about student suicide

11.10.2023
மாணவி தற்கொலை பற்றி தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்

மாணவி

குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண் டார். சுஜிர்தா தன் கைப்பட எழுதிய கடித்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுஜிர்தாவின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு சுஜிர்தா எழுதிய கடிதத்தில் டாக்டர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2 பேர் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.
இதையடுத்து குலசேகரம் போலீசார் 3 பேர் மீதும் பிரிவு 306 கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் குலசேகரம் போலீசார் 5 நாள் ஆன பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கல்லூரி மாணவி தற்கொலையில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தால் தான் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் என்று பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் மவுனம் சாதித்து வருவது வேடிக்கையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

நாடார் சங்கம் புகார்

இந்த நிலையில் மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 6 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
மாறாக இவ்வழக்கை திசைதிருப்பி உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இனைந்து செயல்படுகிறது. எனவே மாணவி சுகிர்தா தற்கொலையில் காலம் தாழ்த்தாமல் தனது தற்கொலைக்கு காரணமானவர்களை பற்றி கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதை மறைத்து விசாரணை என்ற பெயரில் வழக்கை திசைதிருப்ப முயற்சிக்காமல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனு அளித்த போது. தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் நிறுவன தலைவர் ரெஜிசிங் நாடார், துனை தலைவர் சந்திரசேகர பாண்டியன், துனை செயலாளர் அழகன், குமரி மேற்கு மாவட்ட தலைவர் டென்னிஸ், துனை செயலாளர் ஜோஸ், கிழக்கு மாவட்ட துனை தலைவர் கஜேந்திரன், துனை செயலாளர் சீலன், தங்கராஜ், இளைஞரணி செயலாளர் ராஜன், துனை தலைவர் பெனி ஆகியோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *