தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
MS Swaminathan to Thanjavur College of Agriculture – Announcement by Chief Minister M.K.Stal
11/10/2023
தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
காலநிலை மாற்றம் இன்றைய உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. 1969-ம் ஆண்டிலேயே காலநிலை மாற்றம் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் பேசி இருக்கிறார். கலைஞரின் ஆட்சி, உழவர்கள் நலன் நாடும் ஆட்சியாக இருந்தது என எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருந்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிறைய ஆலோசனைகளை எம்.எஸ்.சுவாமிநாதன் வழங்கியுள்ளார். விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் அளப்பரிய பணிகளை நினைவுக்கூரும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தஞ்சை
தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும். இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.