June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

M.K.Stal’s letter to release fishermen arrested by Maldivian Navy

28.10.2023
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள்

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து 1-10-2023 அன்று IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள். 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும். உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை, தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *