June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் உயிர்காக்கும் முதலமைச்சர் காப்பீடு திட்டம்- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

1 min read

Minister R Gandhi launched Chief Minister’s Life Saving Insurance Scheme at Ranipet CMC Hospital

15.11.2023
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் செயல்பட்டு வரும் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டம் மற்றும் நம்மை காப்போம் 48 திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 45 படுக்கைகள் கொண்ட முதலமைச்சர் காப்பீட்டு திட்ட படுக்கை வசதிகளை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்..

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர் காந்தி, “அந்தக் காலத்திலேயே சிஎம்சி மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மூலமாக 40 மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி கொடுத்துள்ளேன் எனவும் இம்மருத்துவமனை நோயாளிகளை காக்கும் சிறந்த மருத்துவமனை உள்ளதாகவும் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் சிறந்த முறையில் சர்வீஸ் மைண்டோடு செயல்படுகிறார்கள்” என பெருமிதமாக பேசினார்..

இந்த நிகழ்வின் போது அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கிரண் ஸ்ருதி, மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மாத்தியூ மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
-சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *