எம்.கே.வி.கே.-தோரணமலை சார்பில் 26-ந் தேதி குடும்ப மராத்தான்; முதல் பரிசு ரூ.10 ஆயிரம்
1 min read
Family Marathon on 26th on behalf of MKVK-Thoranamalai; The first prize is Rs.10 thousand
20.11.2023
எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன்கோவில் நிர்வாகம் இணைந்து தென்காசி குடும்ப மாரத்தான் போட்டியை வருகிற 26-ந் தேதி நடத்துகிறது. உன்னதமான உணவுமுறையுடன் ஆரோக்கியத்தை பேணுவதை வலியுறுத்தும் வகையில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த மாரத்தான் போட்டி 26.11.2023(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு தொடங்கி தோரணமலையில் நிறைவடையும். திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைய மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியது இருக்கும். இதில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாலம்.
இதில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கம் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்.
இந்தப்போட்டியில் முதலிடம் வருவோருக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது வருபவருக்கு ரூ.5 ஆயிரமும், மூன்றாவது வருவோருக்கு ரூ.3 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
இது தொடர்பான விவசரங்களை அறிய 77083 06523, 98421 03038, 93420 57722, 87543 08838 ஆகிய எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை எம்.கே.வி.கே. கல்வி நிறுவனத்தார் தெரிவித்தனர்.