அச்சன்கோவில் திருவாபரண வரவேற்பு கமிட்டி ஆலோசனை கூட்டம்
1 min readAchankovil Thiruvaparana Welcome Committee Advisory Meeting
தென்காசியில் அச்சன்கோவில் திருவாபரண வரவேற்பு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அச்சன்கோவில்
ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தென்காசியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம் இக்கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பிரதானமானது ஆராட்டு திருவிழா.
பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அச்சன்கோவில் ஐயப்பனுக்கு சபரிமலை சாஸ்தாவைப் போல முழு அளவில் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு திருவிழா விமர்சனையாக நடக்கும்.
இக்கோயிலுக்குரிய ஆபரணங்கள் அனைத்தும் கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருவிழா துவங்குவதற்கு முந்தைய நாள் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆபரணங்கள் அச்சன்கோவிலுக்கு எடுத்து வரப்படும் . வரும் வழியில் இந்த ஆபரணங்களுக்கு பல்வேறு ஊர்களில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு கடந்த 30 ஆண்டுகளாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வுக்காக அச்சன்கோயில் திருவிழா பெட்டி வரவேற்பு கமிட்டி என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு தென்காசி தொழில் அதிபர் எஸ் எஸ் ஜி ஹரிஹரன் தலைவராகவும் தென்காசி ஜோதிடர் ஜி மாடசாமி ஜோதிடர் செயலாளர் ஆகவும் நிர்வாகித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு திருவாபரண பெட்டி வரும் 16ஆம் தேதி தென்காசிக்கு வருகிறது
இதற்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஏ சி எஸ் குருசாமி நாடார் மர ஆலையில் வைத்து நடந்தது. கமிட்டி தலைவர் ஏ சி எஸ் ஜி ஹரிஹரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி மாடசாமி ஜோதிடர் முன்னிலை வைத்தார், துணைச் செயலாளர் மணி சந்திரமோகன், துணைத் தலைவர் எஸ்.பி.டி.ஏ. திருமலை குமார்பொருளாளர் சுப்பாராஜ் , ஆலோசகர் மாரிமுத்து குருசாமி, மகா சபரி கணேஷ், சுதர்சன், எல். மணிகண்டன், சதாசிவம், தென்காசி ஐயப்ப சேவா சங்கத் தலைவர் அழகிரி குருசாமி செயலாளர் எஸ்.ராமசுப்பு,, செங்கோட்டை எம் மணிகண்டன் ஐயப்பன், கடையநல்லூர் மாவடி கால் மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு திருவாபரண பெட்டி வரவேற்பு நிகழ்வின்போது சுமார் 1500 பேருக்கு அன்னதானம் வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.