பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல்
1 min read
Why is Pavoorchatram railway flyover delayed?
4.12.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்று வரும் மேம்பால படிகள் தாமதம் ஆவதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது அதாவது ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கான வரைபடக் கோப்புகள் சரியில்லை எனக் கூறி 2 வது முறையாக நெடுஞ்சாலைத் துறைக்கு ரயில்வே துறை திருப்பி அனுப்பியுள்ளது.
இதன்காரணமாக, மேம்பாலப் பணிகள் முடிய மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரி வித்துள்ளனர்.
திருநெல்வேலி -தென்காசி நான்குவழிச் சாலை திட்டம் ரூ. 430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி, தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் மேம்பாலப் பணிகள் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. பணிகள் முடியாததால் ரயில்வே கேட்டை கடந்து செல்ல இயலாமல் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மேம்பாலத்தைப் பொருத்தவரை ரயில்வே – நெடுஞ்சாலைத் துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் மேம்பால வரைபடம் இறுதி வடிவம் பெறாமல் உள்ளதாகக் கூறப் படுகிறது.
மேம்பால வரைபட ஒப்புதல் சம்பந்தமான கோப்புகளை ரயில்வே துறை கடந்த செப். 8ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறைக்கு திருப்பி அனுப்பியது. அதையடுத்து, ரயில்வே துறை கூடுதலாக கேட்ட தகவலில், ஐஐடி ஒப்புதலுடன் கூடிய டிசைன்கள், மண் பரிசோதனை அறிக்கை கணினியில் திருத்தும் வகையிலான வரைபட வடிவ மைப்பு உள்ளிட்ட விவரங்களை நெடுஞ்சாலைத் துறை மீண்டும்ர யில்வேதுறை யிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், அந்த வரைபடத் தில் திருப்தியில்லை எனக் கூறி ரயில்வே துறை 2ஆவது முறை யாக கடந்த நவ. 28ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே பணிகள் மந்த கதியில் நடைபெறும் நிலையில் வரைபடம் இறுதி செய்வதில் இரு துறையினர் இடையே சுமூக முடிவு ஏற்படாததால் மேம்பாலப் பணிகள் எப்போது முடியும் என பொதுமக்கள் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டிய ராஜா கூறியதாவது:-
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமைஅலுவலக அதிகாரிகளிடம் இந்த மேம்பால வரைபடக் கோப்புகள் குறித்துக் கேட்டபோது வரைபடங்கள் திருப்தி அளிக்கவில்லை என்பதால் திருப்பி அனுப்பியதாகவும், நெடுஞ்சாலைத்துறை அதி காரிகளும் வரைபட வல்லுநர்களும் சரியான முறையில் வரைபடங்கள் தயாரித்து கொடுத்தால் ஒப்புதல் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இதுதொடர்பான தகவல்கனை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொடுத்து. குறித்த நேரத்தில் ஒருங்கிணைப்பு செய்து, பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். இந்த பகுதி பொதுமக்களும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.