கோவிலூற்று குளத்திற்கு தண்ணீர் வந்தது
1 min read
Water came to Kovilootu pond
4.12.2023
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிலூற்று மேலவவ்வால் குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஊராட்சி ஒன்றிய 2வது வார்டு பகுதியில் கோவிலூற்று மேலவவ்வால் குளம் அமைந்துள்ளது. இக்குளம் நிரம்பினால் கோவிலூற்று சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இக்குளத்திற்கு நாகல்குளம் நிரம்பி பூலாங்குளம் வழியாக மதிக்கட்டான் கால்வாய் மூலமாக தண்ணீர் வரும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக நாகல்குளம் நிரம்பி மறுகால் விழுகிறது. இந்த தண்ணீர் எவ்வித தடையும் இன்றி கோவிலூற்று குளத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனிடம், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், கோவிலூற்று திமுக துணை செயலாளர் ஜெயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளம்பருதி சண்முக சிங், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதைத்தொடர்ந்து கோவிலுற்று குளத்திற்கு மதிக்கட்டான் கால்வாய் மூலம் தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் கோவிலூற்கு பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இக்குளத்திற்கு தண்ணீர் வர முயற்சி மேற்கொண்டு ஏற்பாடு செய்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.