July 21, 2026

Seithi Saral

Tamil News Channel

விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

1 min read


India has achieved soaring growth in the space sector – PM Modi expresses pride.

20.7.2026
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத் துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி கூறியதாவது:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் அவசியமானது.

விண்வெளித்துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள்.

இந்திய இளைஞர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. நாட்டில் 3-வது செமி கண்டக்டர் ஆலை அமைய உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். இந்தியாவில் இது இளைஞர்களுக்கான காலம். 56 வயது இளைஞர் என கூறி கொள்பவருக்கான காலம் இது இல்லை (என ராகுலை மறைமுகமாக விமர்சித்தார்.)
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *