June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

1 min read

Tenkasi accident case government bus confiscation for non-compensation

12.12.2023

தென்காசியில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்த பொதுப்பணித் துறை ஊழியருக்கு நஷ்ட ஈடு வழஙக அரசு போக்குவரத்து துறை மறுத்ததால் அரசு பஸ் நீதிமன்ற உத்தரவுபடி ஜப்தி செய்யப்பட்டது.

தென்காசி சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா என்பவரது மகன் சீனி அய்யா (வயது 53) .இவர் பொதுப்பணித்துறை ஊழியர். இவர் கடந்த 21.4.2010 அன்று பைக்கில் தென்காசி அருகில் உள்ள குத்துக்கல்வலசை விலக்கு பகுதியில் வந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் மோதியதில் சீனி அய்யா படுகாயம் அடைந்தார் .

அதனைத் தொடர்ந்து வாகன விபத்து நஷ்ட ஈடு கோரி தென்காசி சார்பு நீதிமன்றத்தில் தென்காசி வழக்கறிஞர் கே.பி.குமார்பாண்டியன் மூலமாக சீனி அய்யா வழக்கு தொடர்ந்தார் . இவ் வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.7,76,103 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை இந்த நஷ்டஈட்டுத் தொகையை போக்குவரத்து கழகம் செலுத்தவில்லை.இதனால் அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ்ஸை ஜப்தி செய்து தனக்கு நஷ்ட ஈடு தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.14,16,382 வழங்க உத்தரவிட வேண்டும் என சீனி அய்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

வழக்கை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நின்ற அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர் சீனிஅய்யா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தென்காசி கே பி குமார் பாண்டியன் ஆஜராகி வாதாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *