June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீரங்கம், திருப்தியில் சொர்க்க வாசல் திறப்பு

1 min read

Srirangam, opening the gates of heaven in satisfaction

23.12.2023
திருச்சி ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார். அப்போது ஏராளமாக பக்தர்கள் தரிசநம்செய்தனர்.
இதை யடுத்து இன்று ராப்பத்து உற்சவம் தொடங்கியது.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி உற்சவர் நம்பெருமாள் இன்று அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியே வந்தார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வந்தார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதித்தார்.
அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருப்பதி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆதலால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் வி.வி.ஐ.பி.க்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *