June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

யூடியூப் சேனலில் மோடி 2 கோடி சந்தாதாரர்களைத் தொட்டு சாதனை

1 min read

Modi hits record 2 crore subscribers on YouTube channel

26.12.2023
பிரதமர் மோடியின் யுடியூப் சேனல், சந்தாதாரர் எண்ணிக்கை மற்றும் வீடியோ பார்வை ஆகிய இரண்டிலும் உலக தலைவர்களை எஞ்சி உள்ளது. யூடியூப் சேனலில் 2 கோடி சந்தாதாரர்களை கொண்ட ஒரே உலகத் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.
அவரது வீடியோக்கள், 450 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு சாதனை தான்.
தற்போதைய அரசியல் தலைவர்களில் அனைத்துவித சமூக வலைதளங்களை பயன்படுத்தும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் சேனல், யூ டியூப் சேனல் என அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார். அதில், அரசின் கொள்கைகள் குறித்த தகவல், அரசு நிகழ்ச்சிகள், திட்டங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், யூடியூப்பில் 2 கோடி சந்தாதாரர்களை பெற்ற முதல் உலக தலைவர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது பக்கத்திற்கு 450 கோடி பார்வைகளும் கிடைத்துள்ளன.
உலக தலைவர்கள் இடையே மோடியின் யூடியூப் சேனல் ஆனது கருத்து பரிமாற்றம் மற்றும் பார்வையாளர்களுக்கு புதிய தளங்களை அமைத்து கொடுத்துள்ளது. 2 கோடி சந்தாதாரர்கள் என்பது பிரதமரின் புகழுக்கு கிடைத்த சான்று மட்டுமல்ல, அரசியல் உரையாடலை வடிவமைப்பதில் டிஜிட்டல் தளங்களின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *