குற்றாலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா
1 min read
Inauguration ceremony of Chief Minister Project with people in Courtalam Municipality
28.12.203
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி கிழக்கு ஒன்றியம் குற்றாலம் பேரூராட்சியில்
மக்களுடன்முதல்வர் திட்டத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர வே_ஜெயபாலன் குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
டி.ஆர்.கிருஷ்ண ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முத்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜார்ஜ், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், சுப்பிரமணியன், குத்தாலிங்கம், சிவன் பாண்டியன், குற்றாலம் சுரேஷ், மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.