June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜயகாந்த் மறைவுக்கு அமித்ஷா, ராகுல்காந்தி இரங்கல்

1 min read

Amit Shah, Rahul Gandhi condole Vijayakanth’s demise

28.1.2023
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-,

தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓம் சாந்தி சாந்தி.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான அவர் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

சினிமா, அரசியலில் தமது அளப்பரிய பங்களிப்பின் மூலம் லட்சக்கணக்கானோரின் இதயங்களில் இடம் பெற்றவர் விஜயகாந்த். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி தனது இரங்கலில் தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *