June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 180 மாணவர் களுக்கு 9.77 கோடி கல்வி கடன்- ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்

1 min read

9.77 crore education loan to 180 students in Tenkasi- Collector Kamal Kishore

16.2.2024
தென்காசி மாவட்டம் இ.சி.ஆ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் 180 மாணவ மாணவியர்களுக்கு ரூ.9 கோடியே 77 இலட்சம் மதிப்பிலான கல்விக்கடன் உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் இசி.ஆஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கல்விக்கடன் உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். ப

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க. பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் கல்விக்கடன் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கடன் உதவித்தொகையினை பெற்ற மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் உற்றதுணையாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு தங்கு தடையின்றியும் விரைவாகவும் கல்வி கடன் வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கல்வி கடன் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு இன்றே அவர்களது கல்வி கடனை அனுமதிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பரிசீலினையில் உள்ள கடனை உடனடியாக வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் தொடங்க நல்ல சூழல் நிலவுவதாகவும் அதற்கு தகுந்தபடி வங்கிகள் பயன்படுத்தி தொழிற் வளர்ச்சிக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது 180 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் கோடியே 9.77 கோடி மதிப்பிலான கல்விக் கடன்கள் வழங்கப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் பிவிஆர். ரவி, வட்ட முன்னோடி வங்கி மேலாளர், கணேசன், தென்காசி கனரா வங்கி கிளை ரமேஷ்குமார், மாவட்ட தொழில் மையம் மாரியம்மாள்.உதவி மக்கள் முதன்மை மேலாளர் பொது மேலாளர் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் (செய்தி) தென்காசி மாவட்ட அனைத்து பொதுதுறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *