June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் மார்ச் 9 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

1 min read

National People’s Court on March 9 in Tenkasi district

18.2.2024
தென்காசியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை நீதிமன்றங்களிலும் 2024-ஆம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற மார்ச் மாதம் 9ம்-தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சந்திரா தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி கருணாநிதி வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படியும் மற்றும் தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும்; முதன்மை சார்பு நீதிபதியுமான மாரீஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தென்காசியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை நீதிமன்றங்களிலும் 2024-ஆம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற மார்ச் மாதம் 9ம்-தேதி நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றங்களின் முக்கிய நோக்கம் என்னவெனில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், நீதிமன்ற முன் வழக்குகளையும் விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாகும். மேலும் மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள். உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள்) போன்ற வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படுவதால் . வென்றவர்-தோற்றவர் என்றபாகுபாடு இன்றியும் . உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், மக்கள் நீதிமன்றம் வழிவகை செய்கிறது.
மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே பொதுமக்கள் வரும் மார்ச் 9ம-;தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி, தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு பயன் பெறலாம் இவ்வர்று அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *