June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் வணிக வளாகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு- தீர்மானம் ஒத்திவைப்பு

1 min read

Public opposition to construction of commercial complex in Surandai- resolution adjourned

10.3.2024
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட குருந்தன்மொழி குறிஞ்சான்குளம் ரோட்டில் சர்வே எண் 844/5 ல் நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்ட ஒப்பந்த ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுரண்டை நகராட்சியில் நிறைவேற்ற தயாராக இருந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது

இந்நிலையில் இந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது எனவும் இதில் வணிக வளாகம் கட்டினால் சுமார் 22 மீட்டர் அகலம் உள்ள இந்த ரோடு 10 மீட்டராக குறைவதுடன் வாகனங்கள் எளிதாக சென்று வர முடியாமல் விபத்துகள் ஏற்படும் எனவும் வரும் காலங்களில் வளர்ந்து வரும் வாகன பெருக்கத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் போது விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்
ஆகவே அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டக்கூடாது என கூறி சுரண்டை நகராட்சி கவுன்சிலர் கீழச்சுரண்டை மாரியப்பன் தலைமையில் சுரண்டை பரமசிவன், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக துணை செயலாளர் எஸ்கேடி துரைமுருகன் உள்ளிட்ட 100 பேர் நகராட்சி கூட்டம் நடைபெறும் போது போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் நகராட்சி ஆணையாளர் (பொ) ரவிச்சந்திரனிடம் மனு வழங்கினார் மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதாக நிறைவேற்றப்பட இருந்த தீர்மானம் ஒத்திவைக்கப் பட்டது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *