2 புதிய தேர்தல் கமிஷனர்கள் தேர்வு?
1 min read
2 New election commissioners selected?
14.3.2024
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிக்கு கேரளாவைச் சேர்ந்த ஞானேஸ்வர் குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் தேர்தல் நடைமுறைகளை நிறைவேற்றும் தலைமை தேர்தல் கமிஷன், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் தலைமையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். பிரதமர் தலைமையில், மத்திய அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய உயர்மட்டக் குழு அளிக்கும் பரிந்துரையை ஏற்று, ஜனாதிபதி இந்த நியமனத்தை செய்கிறார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷனர் அனூப் சந்திர பாண்டே கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் லோக்சபா தேர்தல் திட்டமிட்டப்படி மே மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புதிய இரண்டு தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்வதற்காக, நேற்று தேர்தல் குழு கூட்டம்
நடந்தது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் கலந்து கொண்டனர்.
இந்த நிலையியில் பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகலாம் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த தகவலை தெரிவித்தள்ளார்.