அய்யாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Human Rights Day Camp at Ayyappuram-District Collector Participation
14.3.2024
தென்காசி மாவட்டம், தென்காசி தாலுகா, குத்துக்கல் வலசை ஊராட்சி அய்யாபுரம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் 69 பயனாளி களுக்கு ரூ. 3 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
இந்த முகாமில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது, நீங்களும் நலமா. உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று பொது மக்களை சந்தித்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நீங்களும் நலமா திட்டம் மூலம் தொலைபேசி வாயிலாக அப்பகுதியில் உள்ள அமைச்சர் பெருமக்கள் கேட்டறிந்தார்கள்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று இரு நாட்கள் அப்பகுதியில் தங்கி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி. மின்கம்பங்கள். மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா என்பதனையும் அனைத்து துறை அலுவலர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இது போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் மகளிருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தைப் பொருத்த வரைபெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் பட்டு வருகிறது என மாவட்டஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசினார்.
எனவே, பெண் குழந்தை களை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முருகானந்தம். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷேக் அயூப், தென்காசி வட்டாட்சியர் பட்டமுத்து, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.