June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவேங்கடம் அருகே மாடு மேய்ப்பதில் மோதல்- 3 பேர் கைது

1 min read

Clash in cow grazing near Thiruvenkadam- 3 people arrested

15.3.2024
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே சங்குப்பட்டி பகுதியில் மாடுகள் மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம். திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குப்பட்டி பகுதியில் அந்தோணி என்பவரின் நிலத்தில் மணலூரை சேர்ந்த மாடசாமி என்ற நபரின் ஆயிரம் மாடுகளை கடந்த 5 நாட்களாக மேய்த்து வந்துள்ளார். இது பிடிக்காமல் அப்பகுதியில் மாடுகளை மேய்த்து வந்த சுரேஷ்குமார். சங்கரநாராயணன், குருமூர்த்தி மற்றும் மாய அரசன் ஆகியோர் இணைந்து மாடசாமி என்பவரின் மாடுகளை மேய்த்து வந்த முத்து மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு நபர்களை அடித்து தாக்கியுள்ளனர், இதில் காயப்பட்ட இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து முத்து திருவேங்கடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமரன் விசாரணை மேற்கொண்டு சின்ன காலாம்பட்டி பகுதியை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவரின் மகன் சுரேஷ்குமார்(வயது 32), மாரியப்பன் என்பவரின் மகன் சங்கரநாராயணன் (வயது30) ஆனந்தராஜ் என்பவரின் மகன் குருமூர்த்தி(வயது 26) மற்றும் சேவியர் என்பவரின் மகன் மாய அரசன்(வயது 21) ஆகிய 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாய அரசனை தவிர்த்து பிற மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 07இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *