June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பகுதியில் தொடர் திருட்டு 5 பேர் கைது

1 min read

5 arrested for serial theft in Katayam area

29.3.2024
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், கடையம் காவல்துறையினர் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட தனிப்படையினர் ஆகியோர்களின் தீவிர விசாரணையில், மேற்படி குற்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்த சுடலைஒளிவு(எ) சுடலை (வயது 36) மேலக்குத்தப்பாஞ்சான், பரமசிவன்(வயது 36) மலையான்குளம், முருகன்(வயது44) அம்மன் கோவில் தெரு மேலக்குத்தப்பாஞ்சான், இசக்கிராஜ் (வயது 34) தெற்குத்தெரு மேலக்குத்தப்பாஞ்சான், மாடக்கண் செல்வம்(வயது 28) தெற்குத்தெரு மேலக்குத்தப் பாஞ்சான் ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து தென்காசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *