June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய மந்தரி அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து

1 min read

Central Minister Amit Shah’s Tamil Nadu tour canceled again

4.4.2024
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இன்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனிக்கு செல்ல அமித்ஷா திட்டமிருந்தார்.

தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளிலும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்வதாக நேற்று அறிவித்தார்.

மேலும், அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்றிரவு மதுரை வருவதாக இருந்த அமித்ஷாவின் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *