June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை – சேர்ந்த மரம் பகுதியில் கனிமொழி பிரச்சாரம்

1 min read

Surandai – Kanimozhi campaign in the area of the tree

4.4.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி சுரண்டை மற்றும் சேர்ந்த மரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் தலைமை தாங்கினார் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செய லாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஈ.ராஜா முன்னிலை வகித்தார்.

அப்போது திறந்த வாகனத்தில் நின்றவாறு கனிமொழி எம்பி பேசியதாவது:-

தமிழையும் தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிற ஒன்றிய அரசு தேர்தல் நேரத்தில் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் திடீர் பாசம் வந்தது போல் மோடி மக்களை ஏமாற்றி வருகிறார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும் தேர்தலே நடத்தாமல் அதிகாரம் செலுத்த பாஜக முயற்சி எடுக்கும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டு கேள்வி கேட்கும் அதிகாரம் பறிக்கப்படும்.

பாஜக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் பாஜக அரசுக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் அமுலாக்க துறை மூலம் மிரட்டி கைது செய்யப்படுகின்றனர். கடந்த தேர்தலில் கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் 15 லட்சம் தருவதாக கூறிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக கூறி பத்து ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறி ஏமாற்றியவர் தான் நரேந்திர மோடி .

தமிழகத்தில் இயற்கை சீற்றத்தால் புயல் வெள்ளத்தால் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது எட்டி பார்க்காத நரேந்திர மோடி ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்காத நரேந்திர மோடி இப்போது தேர்தல் வந்திருப்பதால் மக்களை ஏமாற்ற அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார் எனவே தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடக் கடாது.

வடமாநிலங்களில் பாஜக படுதோல்வி அடைவது உறுதியாகிவிட்டது எனவே தமிழகத்திலும் எந்த தொகுதியிலும் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *