மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசி வருகை
1 min read
Union Home Minister Amit Shah will visit Tenkasi tomorrow
4..4.2024
தென்காசியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பெ. ஜான்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்திட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை(வெள்ளிக்கிழமை) தென்காசி நகருக்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ.ஜான் பாண்டியனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தென்காசியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி நாளைமதியம் காரைக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வரும் அமித்ஷா தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞசி இராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 2 மணியளவில் தரை இறங்குகிறார்.
அதன் பின் அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். மாலையில் தென்காசி நகராட்சி வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை திறந்த வாகனத்தில் சென்று பாஜக வேட்பாளர் ஜான்பாண்டிய னுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அவருக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைலர் கே ஏ ராஜேஷ் ராஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென்காசி வருகை தருவதை முன்னிட்டு தென்காசியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.