June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் அருகே லாரி அரசு பஸ் மோதி நடத்துனர் பலி – 11 பேர் காயம்

1 min read

Lorry collides with government bus near Kadayanallur, conductor killed – 11 injured

9.4.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் அரசு பஸ் நடத்துனர் பலியானார்.மேலும் பஸ்சில் இருந்த 11 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை சுந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்த கணேசன் ஓட்டி வந்தார். செங்கோட்டை மேலூரைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராக இருந்தார்.

அதிகாலை நேரம் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சையது காட்டன் மில்ஸ் முன்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

அப்போது செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியில் மோதிய தில் பஸ்ஸின் நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த பொட்டல்புதுரைச் சார்ந்த பிர்தவுஸ் மற்றும் தென்காசி மேல கரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறு சிறு காயங்களுடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *