குடியாத்தம் இயற்கை மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை
1 min read
Kumari Ananthan treatment at Kudiatham Nature Hospital
11.4.2024
குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்காக குமரி அனந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் ஹைதாரபத்தில் உள்ள ராஜ்பவனில் மூன்று ஆண்டுகளாக மகளின் அரவணைப்பில் நரம்பு தளர்ச்சி மற்றும் சுவாச பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அந்த சிகிச்சையின் தொடர்ச்சியாக தற்போது குடியாத்தம் அத்தி மருத்துவனையில் அவருக்கு தொடர் சிகிச்சையை அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் அத்தி மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் தங்கராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளித்ததன் மூலம் நல்ல உடல்நல முன்னேற்றத்துடனும் ஆரோக்கியத்துடனும் நலமாக உள்ளார்.
மேலும், சிகிச்சையின் முடிவாக இன்னும் சில நாட்களில் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என்பதை அத்தி மருத்துவமனையின் முதன்மை இயக்க அலுவலர் விஜயராகவன் தெரிவித்தார்.