June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை – தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு

1 min read

Telugu Desam Party Announces Not Contesting Parliamentary Elections

11.4.2024
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. அங்கு இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநகரி கூறியதாவது;

“நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தெலுங்கானாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தெலுங்கானாவில் நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். வருகிற ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *