புன்னையாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் அதிமுகவில் இணைந்தார்
1 min read
Punnaiyapuram panchayat president joins AIADMK
13.4.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா தலைமையில் அதிமுகவில் இணைத்தனர்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் மதிமுக ஒன்றியச்செயலாளா் கண்ணன் தலைமையில் புன்னையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவி திலகவதி கண்ணன் மதிமுகவிலிருந்து விலகி தனது ஆதரவாளா்களுடன் அதிமுகவில் இணைந்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி புன்னையாபுரம் மதிமுக ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவி திலகவதி கண்ணன் மற்றும் ஆதரவாளர்களுடன் தென்காசி அதிமுக வடக்கு மாவட்டக் அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி(எ)
குட்டியப்பா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
புதியதாக அதிமுகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகளுக்கு தென்காசி வடக்குமாவட்ட செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வசந்தம் முத்துபாண்டியன் நிர்வாகிகள் கிருஷ்ணாபுரம் தியாகராஜன், புன்னயாபுரம் மாரியப்பன், ஜானகிராமன், கோபால், முத்தமிழ் செல்வன், செல்வம், செல்லகனி, மாரியப்பன், புன்னையாபுரம் திருப்பதி, சுந்தரம், மாணிக்கம், நாராயணன் மதிமுக மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்