May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

10-ம் வகுப்பு தேர்வு முடிவு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது

1 min read

The result of class 10 will be released today at 9.30 am

8.5.2024
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி (நாளை மறுநாள்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மே 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

அன்றைய தினம் மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.