June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

குலையநேரி ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் சிமெண்ட் சாலைப்பணி

1 min read

Cement road work in Kulayaneri panchayat costing Rs.11 lakh

8.5.2024
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், குலையநேரி ஊராட்சி பூபாண்டியாபுரத்தில் ரூ.11 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வழக்கறிஞர் க.கனிமொழி தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், குலையநேரி ஊராட்சி பூபாண்டியாபுரம் கிராமத்தில் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.கனிமொழி நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான வழக்கறிஞர் க.கனிமொழி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பூபாண்டியா புரம் திமுக கிளை செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார், பஞ்சாயத்து தலைவர் சீதா பாலமுருகன், ஊர் நாட்டாமை குருசாமி, ரத்தினசாமி, குலையநேரி காந்தி, தங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பூ பாண்டியாபுரம் ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று , சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்கி வைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரரும், மாவட்ட கவுன்சிலருமான வழக்கறிஞர் க.கனிமொழிக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *