நீட் மறுதேர்வு கோரி மாணவர்கள் மனு: தேர்வு முகமை பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
1 min read
Students petition for re-examination of NEET: Supreme Court notice for examination agency to respond
20.5.2024
நீட்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன.
நீட்தேர்வு தொடங்கு வதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் இருந்து வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தேர்வர்களுக்கு ஜூன் 23-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீட் தேர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரி வித்தது. நீட் தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.
ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை ஐகோர்ட்டுகளில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் மனுவை ஏற்று இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதேபோல மேகாலயாவில் நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் குறைவாக வழங்கப்பட்டதாக கூறி சில மாணவர்கள் மறுதேர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கருணை மதிபெண்களை வழங்கிய 1,563 மாணவர்களுடன் தங்களுக்கும் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீட் தேர்வு தொடர்பான வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் ஜூலை 8-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.