June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

1 min read

Hosuril International Airport: Chief Minister’s Announcement

27.5.2024
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரையாற்றினார்.

முதல்-அைமச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம்.

ஓசூர் கடந்த சில ஆண்டுகளாக அதிக முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. அந்த நகரை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு. கிருஷ்ணகிரி, தருமபுரி பொருளாதார வளர்ச்சி அடைய ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது.

ஓசூரில் 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் விதமாக பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *