June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மாதாபட்டணம் ச.ச‌.வி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 min read

Anti-drug awareness program at Mathapatanam School

28/5/2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாதாபட்டணம் சற்குன சத்திய வித்யாலயா மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

சற்குன சத்திய வித்யாலயா மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா தலைமை தாங்கினார்.பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கட் லட்சுமி , தங்கராஜன், ரெஜினா தெரசாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் நாட்டு நல பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குத்தாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்தசிபியா போதை பழக்கத்தால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து மாணவரிடையே விளக்க உரைநிகழ்த்தினார்
,நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் மாணவரிடையே போதை பழக்கம் இருப்பதாகவும் அவ்வாறு போதை பழக்கம் உள்ள மாணவர்களுக்கு எதிர் காலத்தில் அந்த மாணவனுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் மரணம் விரைவில் நேரிடும் என்பதையும் அறிவியல் பூர்வமாக மாணவரிடையே பதிவு செய்தார் .

இந்த நிகழ்ச்சியில் சமூகத்தின் சீரழிவுக்கு போதை பழக்கமும் ஒரு காரணம் என்று பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வெங்கட் லட்சுமி மாணவரிடையே தனது கருத்தினை பதிவு செய்தார்.
இது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குத்தாலிங்கம், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜலட்சுமி ,மகேஷ், சேர்மராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் ஜெயரானி இளம் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழழரசி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் வரலாற்று ஆசிரியை தமிழரசி அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *