June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை – பேச்சுப் போட்டி

1 min read

Essay – Speech Competition for School and College Students in Tenkasi

4.7.2024
தென்காசி மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா வினை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் விழா என கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்
அடிப்படையில், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் தென்காசி இ சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 09,07.2024 அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்ட அளவில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.07.2024 ஆம் நாளன்று நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் என்ற வகையில் கலந்து கொள்ளலாம்.

கட்டுரைப்போட்டிக்கான தலைப்பு:- ஆட்சிமொழித் தமிழ் பேச்சுப்போட்டி தலைப்புகள்-1.குமரி தந்தை மார்சல் நேசமணி, 2 தென்னாட்டு பெர்னாட்ஷா 3. பேரறிஞர் அண்ணாமுத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு தலா முதல் பரிசுத் தொகை ரூ.10,000/, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.7,000/- மூன்றாம் பரிசுத் தொகை ரூ.5,000/- என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி (ம) பேச்சுப்போட்டிகள் 09.072024 அன்று தென்காசி இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 09.00 மணிக்கு நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 2502521) தொடர்பு கொள்ளலாம்.

போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் 16.072024 அன்று சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறலாம். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ / மாணவிகளுக்கு சென்னையில் ஜீலை 18 அன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசுகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.

தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும்.
இவ்வாறு ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *