June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி

1 min read

Bathing in Old Courtalam waterfall is allowed till 8 pm

4.7.2024
தென்காசி மாவட்டம்
பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இரவு 8 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம்
பழைய குற்றாலம் அருவியில் முன்பு சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுதிக்கப்பட்ட னர். இந்நிலையில் கடந்த மே மாதம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நெல்லையைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அஸ்வின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பழைய குற்றால அருவி சுற்றுலா பயணிகள் குளிக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் பழைய குற்றால அருவியில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுபாடுகள் காரணமாக தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகளும், ஆட்டோ ஓட் டுனர்களும் மற்றும் சில பொதுநல அமைப்புகளும் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:-

பழைய குற்றால அருவியில் நீராடும் நேரத்தை நீடிக்க கோரி பொதுமக்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலாபயணிகள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீராடும் நேரத்தை நேற்று (3ம்தேதி) முதல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி நீராடிட கேட்டுக்கொள்ளப்படுகி றார்கள். மேலும் தென்காசி சுற்று வட்டாரப் பகுதி ஆட்டோக்கள் பழைய குற்றாலம் அருவியின் பிரதான வாயில் வரை சென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை இறக்கி விடவும், ஏற்றி வரவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் பிரதானவாயிலில் உள்ள பார்க்கிங் வசதியினை பயன்படுத்த வேண்டாம் என கேட் டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பழைய குற்றாலம் அருவியில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. அருவிபகுதி உட் பட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் மற்றும் கேரிபேக் பயன்படுத்திடவும், குடி போதையில் எவரும் அருவியில் நீராடவும் அனுமதியில்லை.

பழைய குற்றால அரு வியின் மேல் பகுதியில் ஏற்படும் நீர்வரத்து மற் றும் வெள்ளப்பெருக்கின் அடிப்படையில் சூழ்நிலைக்கு ஏற்ப நீராடுவதறகான அனுமதி காவல் துறையினரால் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது காவல் துறை மூலம் வழங்கப் படும் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் அறி விக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் களை பின்பற்றி பாதுகாப்பாக நீராடுவ தற்கு பொதுமக்கள் ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து. மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை தொடர்ந்து நேற்று முதல் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் இரவு 8 மணி வரை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *