குற்றாலம் மவுனசாமிமடம் பீடாதிபதி மருத்துவமனையில் அனுமதி
1 min read
Admitted to Courtalam Maunasamimadam Dean Hospital
4.7.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 108 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமி மடத்தின் பீடாதிபதியாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பரமஹம்சர், பரிவ்ராஜ காச்சார்யா, ஜகத்குரு புனித ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மகா சுவாமிகள் உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி குற்றாலம்
ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி
ஸ்ரீ சித்தேஸ்வரி பீட பக்தர்களுக்கு
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஶ்ரீ குருப்யோநமஹ் பரமஹம்சர், பரிவ்ராஜகச்சாரியார், குற்றாலம் சங்கராச்சாரியார், மந்திர ஸ்வரூபம், பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மஹாஸ்வாமிக்கு கடந்த 02/07/2024 அன்று சென்னை காவேரி மருத்துவக் கழகத்தில் உடல்நலப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கரோனரி ஆஞ்சியோகிராபி நடத்திய மருத்துவ நிபுணர்கள், பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிக்கு எலக்டிவ் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர். பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் மருத்துவ மேற்பார்வையில் முழு ஓய்வில் இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பீட மற்றும் பீட ஊழியர்களை நேரிலோ அல்லது தொலைபேசி அழைப்புகளில் தொந்தரவு செய்ய வேண்டாம். என்று அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.