குற்றாலம் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் அபராதம்
1 min read
Penalty for confiscation of plastic bags in criminal shops
4.5.2024
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் நெகிழிப்பைகள் பயன்படுத்தப் படுகிறதா என்பதை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி குற்றாலம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் நெகிழிப்பைகள் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி டி.ஆர்.சுஷாமா மற்றும் சுகாதார அலுவலர் ஆர். இராஜகணபதி ஆகியோர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று குற்றாலம் பேரூராட்சியின் செயல் அலுவலர் டி.ஆர்.சுஷாமா, பேரூராட்சி சுகாதார அலுவலர்
ஆர்.இராஜகணபதி, குற்றாலம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் உதவியாளர் ராஜகோபால், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சந்தானம், அய்யனார், உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட 12 கிலோ நெகிழிபைகள் சில கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தக் கடையின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 14 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இனி வரும் காலங்களில் இது போன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.