June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் – மறியல்;52 பேர் கைது

1 min read

Tenkasi teachers protest- picket 52 arrested

4.7.2024
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய டிட்டோ ஜாக் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டதால் 52 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசாணை 243 ஐரத்து செய்ய வேண்டும்; பதவி உயர்வு சார்ந்த வழக்கு உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளதால் வழக்கின் தீர்ப்பு வரும் வரை மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத்
தலைவர் சுதர்சன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டத் தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலர் ராஜேந்திரன் மறியலை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ஆரோக் கியராசு வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்யர் மன்றத்தின் மாவட்ட பொருளாளர் அருள்ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார். ஆர்ப்பாட்ட முடிவில் மறியலுக்குச் செல்ல முயன்ற 52 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *