June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் 12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது

1 min read

A 12 feet long cobra was caught in Courtalam

10.7.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் ஒரு தனியார் விடுதிக்குள் புகுந்த 12 அடி நீள ராஜ நாகத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு த்துறையினர் உயிருடன் பிடத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அரியவகை மலைப்பாம்புகள், மான் மிளா, யானை, கரடி, சிறுத்தைபுலி என பல்வேறு வனஉயிரனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவைகள் அவ்வப்போது விளைநிலங்களுள் வருவதும் பின்னர் அதை வனத்துறையினர் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளது இதனால் சுற்றலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதினால் குளிர்ச்சியாள சூழ்நிலை ஏற்பட்டுவரும் நிலையில் அரியவகையான 12 அடி ராஜநாகம் ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மரக்கிளையில் இருப்பதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தென்காசி தீயணைப் புதுறையினர் உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமை சிறப்பு நிலை அலுவலர் ஜெயரத்தினகுமார் சிறப்பு நிலை அலுவலர் (போக்குவரத்து) ஜெயபிரகாஷ் பாபு மற்றும் வீரர்கள் ராஜ்குமார் வெள்ளை பாண்டியன் கார்த்தி மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்

அப்போது அந்த ராஜநாகம் மரத்தின் உச்சியில் இருந்தது. எனவே அந்த ராஜ நாகத்தை பிடிப்பதற்க்கு தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரைபீச்சி அடித்து ராஜ நாகத்தை பிடிக்க முயற்சியில் ஈடுபட்ட நிலையில் சுமார் 2 மணிநேர போரட்டத்திற்க்கு பின்னர் அதனை லாவகமாக பிடித்து வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அப்பகுதி பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் நிம்மதியடைந்த தோடு தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்களின் துணிச்சலான இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *