தென்காசியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
1 min read
Speech competition for school and college students in Tenkasi
10.7.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 19.07.2024 அன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டிகள் தென்காசி இ. சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது .
இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நீங்க புள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவி களுக்கும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டிகள் 19.07.2024 அன்று காலை 09.00 மணிக்கு தென்காசி இ சி ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளிமாணவ மாணவிகளுக்கான தலைப்புகள் பின்வருமாறு, கலைத் தாயின் தவப்புதல்வன். சங்கத் தமிழ், பிறப்பொக்கும் எல்லாம் யிருக்கும். முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழும் முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படத்தமிழ் முத்தமிழறிஞர் கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள். பெரியார், அண்ணா வழியில் முத்தமிழறிஞர் கலைஞர், முத்தமிழறிஞர் கலைஞரின் குறளோவியம், தமிழ் நாட்டின் கல்வி மேம்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் பணிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான தலைப்புகள் பின்வருமாறு அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம். குறனோவியம் கலைஞரின் எழுதுகோல்,சமூக நீதி காவலர் கலைஞர். சமூகநீதி நாயகர் கலைஞர், மாற்றுத்திறனாளி களின் நலன் காத்த கலைஞர், திராவிட இயக்கத் தூண் கலைஞர், சட்டமன்ற வரலாற்று நாயகர் கலைஞர் அன்றும் இன்றும் என்றும்
மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ / மாணவிகளுக்கு முதல்பரிசு ரூ.5000/-% இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ,மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மாவட்ட அளவில் நடைபெறும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசு ரூ.5,000/- இரண்டாம்பரிசு ரூ.3,000, மூன்றாம்
பரிசுத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவ, மாணவி களுக்கு சிறப்பு பரிசு ரூ.2,000/- வீதம் இரண்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து இரண்டு மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பின்புறம் ஊரக வளர்ச்சி முகமை பழைய கட்டிட முதல் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 2502521) தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறவேண்டுமென மாவட்ட ஆட்சிதலைவர்ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.