June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

வீராணத்தில் புதிய ரேசன் கடை கட்டிடம் திறப்பு விழா

1 min read

Inauguration of the new ration shop building in Viranam

10.7.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் ஊராட்சி பகுதியில் ரூபாய் .13.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிட திறப்பு விழாவில் திமுக மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மற்றும் தென்காசி எம்.பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி எம்.எல்.ஏ எஸ் பழனி நாடார்., ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி சட்டமன்ற தொகுதி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், வீராணத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம்.திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலரும், திமுக கிளை செயலாளருமான சேக்முகம்மது அனைவரையும் வரவேற்று பேசினார்.

தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் கலந்து கொண்டு ரேசன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.பி.எம். அன்பழகன், வீராணம் திமுக கிளைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அமானுல்லா , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே ரமேஷ், வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன், முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன்,கருவந்தா கவுன்சிலர் பழனி (எ) பால்துரை, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், பரமசிவன், வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை, நியாய விலை கடை ஊழியர் ஞானந்த சண்முகம், அரசு ஒப்பந்தக்காரர் செந்தூர்பாண்டியன், முன்னாள் காங்கிரஸ் நகரத் தலைவர் முஸ்தபா, அன்சார் அலி ,முகம்மது முஸ்தபா, நெட்டூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *