தென்காசி மாவட்டத்தில் 28 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
1 min read
Transfer of 28 Assistant Inspectors in Tenkasi District
10.7.2024
தென்காசி மாவட்டத்தில் 28 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணியிடயிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ் குமார் உத்தர விட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம்
திருவேங்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் வாசுதேவநல்லூருக்கும், அச்சன்புதூர் உதவி ஆய்வாளர் மாடசாமி புளியங்குடிக்கும், புளியங்குடி உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி திருவேங்கடம் காவல் நிலையத்திற்கும், சுரண்டை சின்னத்துரை அச்சன்புதூருக்கும், தென்காசி சதீஷ்குமார் வீ.கே. புதூருக்கும், பாவூர்சத்திரம் கார்த்திக் ஆய்க்குடிக்கும், சங்கரன் கோவில் தாலுகா மாரியப்பன் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்திற்கும், பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி ஜெயராஜ் அய்யாபுரம் காவல் நிலையத்திற்கும், கடையநல்லூர் உதவி ஆய்வாளர் சுதாகர் பாவூர்சத்திரத்திற்கும், புலியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் குமார் கடையநல்லூருக்கும், பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர் திவ்யா சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்திற்கும்,
கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் பாவூர்சத்திரத்திற்கும், தென்காசி போக்குவரத்து உதவி ஆய்வளர் ஆனந்தி ஆயுதப்படைக்கும், புளியங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி தென்காசி காவல் நிலையத்திற்கும், பாவூர்சத்திரம் டேவிட் ஸ்டீபன் புலியரை காவல் நிலையத்திற்கும், தென்காசி சந்திரசேகரன் நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கும், குருவிகுளம் ரவிச்சந்திரன் மகளிர் மற்றும் சிறு குழந்தைகள் தடுப்பு குற்றப்பிரிவுக்கும், கரிவலம்வந்தநல்லூர் மாரிமுத்து சாம்பவர் வடகரைக்கும்,
சங்கரன்கோவில் டவுன் ஆறுமுகசாமி புளியங்குடி பரமசிவன் ஆகியோர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கும்,
பாவூர்சத்திரம் கல்யாணசுந்தரம்
சுரண்டை காவல் நிலையத்திற்கும்
செங்கோட்டை சுப்பையா பாவூர்சத்திரத்திற்கும்
சிவகிரி முருகன் சின்ன கோவிலாங்குளத்திற்கும், சங்கரன்கோவில் தாலுகா கண்ணன் வாசுதேவநல்லூருக்கும், கரிவலம்வந்தநல்லூர் சுப்பராயலு தென்காசிக்கும் ஆயுதப்படை மணிகண்டன் தென்காசி போக்குவரத்து பிரிவிற்கும், ஆழ்வார்குறிச்சி மகாலிங்கம் ஆலங்குளத்திற்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.