மலையராமபுரத்தில் கபடி போட்டி
1 min readKabaddi Tournament at Malayarampuram
5.8.2024
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரம் அருகே மலையராமபுரத்தில் மேகம் திரைகொண்ட சாஸ்தாகோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மலையராமபுரத்தில், அருணாப்பேரி மேகம்திரைகொண்ட சாஸ்தா கோவில் திருவிழாவையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் 5 ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில், குறும்பலாப்பேரி ஜுனியர் கே.எம்.சி. அணி முதல்பரிசும், பூவை சிட்டி அணி 2வது பரிசும், கொண்டலூர் டி.எம்.சி அணி 3வது பரிசும், கீழப்பாவூர் பாவூர் கிங்ஸ் அணி 4வது பரிசும், பெத்தநாடார்பட்டி அசத்தல் அணி 5வது பரிசும் பெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் ஆகியோர் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கி பாராட்டி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.