நெல்லை எம்பி. ராபர்ட் புரூசுக்கு தமிழ் சான்றோர் பேரவை பாராட்டு
1 min read
Nella MP. Robert Bruce praised by the Tamil Sandars Council
5.8.2024
திருநெல்வேலி மாநகர மக்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசிய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ்- க்கு நெல்லை மாநகர தமிழ் சான்றோர் பேரவை, நெல்லை ரயில் பயணிகள் சங்கம், நமது நெல்லை இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு தனி இரயில்வே கோட்டம் அமைப்பதற்கும், பாளை-குலவணிகர்புரத்தில் இரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கு கூடுதல் இரயில் இயக்குவதற்கும், திருக்குறள் விரைவு இரயிலை தினசரி இரயிலாக அறிவித்திடவும், மூத்த குடிமக்களுக்கான இரயில் பயணச் சலுகைக் கட்டணத்தை விரைந்து அமுல் படுத்தவும், பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை வைத்து உரையாற்றிய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் அவர்களுக்கு நெல்லை மாநகர தமிழ் சான்றோர் பேரவை இரயில் பயணிகள் சங்கம் , நமது நெல்லை மற்றும் பொது மக்கள் பல்வேறு அமைப்பினர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
நமது நெல்லை இயக்கத்தின் கௌரவத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.ரவிசண்முகம், பொருளாளர் எம்.முத்துசெல்வம், சமூக ஆர்வலர்கள் எஸ்.சங்கரநாராயணன், கோ.திருப்பதி, பாளை வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக் துரைராஜ், தமிழச்சான்றோர் பேரவையின் நெல்லை மாநகரத்தலைவர் வழக்கறிஞர் ம.சு.சுதர்சன் உட்பட பலர் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டியதோடு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர்.