June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

மக்களைத்தேடி மருத்துவம் 4ம் ஆண்டு துவக்க விழா

1 min read

Inauguration ceremony of four years of People’s Medicine

6.8.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற மக்களைத்தேடி மருத்துவம் நான்காமாண்டு துவக்க விழா மற்றும் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், பால்வினை நோய்கள், கருப்பை வாய் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் கண் மருத்துவம், தோல் மருத்துவம், சித்த மருத்துவம், காச நோய் காது, மூக்கு, தொண்டை மருத்துவம் பல் மருத்துவம் போன்ற சிகிச்சைகளும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ஆய்வகம் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் என 39 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

இம்முகாமில். மாவட்ட சுகாதார அலுவலர் (பொ).மரு.கீதா ராணி, உதவி திட்டஅலுவலர் .மரு.மொஹினா, மாவட்ட தொற்றுநோய் மருத்துவர் தண்டாயுதபாணி, மாவட்ட தொற்றாநோய் மருத்துவர் அழகு கந்தகுமார். நலக்கல்வியாளர் ஆறுமுகம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) திரு.ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *