புல்லுக்காட்டு வலசையில் இலவச இருதய பாதுகாப்பு பரிசோதனை முகாம்
1 min read
Free Heart Care Checkup Camp at Pulukatu Valasai
28.8.2024
தென்காசி மாவட்டம், புல்லுகாட்டுவலசை அரசு மேல் நிலைப் பள்ளியில் குற்றாலம் ரோட்டரி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச இருதய பாதுகாப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
காமராஜர் இதய பாதுகாப்பு வாகனம் மூலம் நடைபெற்ற இலவச இருதய பாதுகாப்பு பரிசோதனை முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் கை. முருகன் வரவேற்று பேசினார். முன்னாள் ரோட்டரி கவர்னர் கே.ஆர். ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். தென்காசி கூடுதல் காவல் கண்காணிப்பளர் ஆர். வேணுகோபால் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
கெளரவ விருத்தினர்களாக ரோட்டரி சங்கத்தின் மேஜர் டோனர் எம்.ஆர். அழகராஜா, தென்காசி நகர்மன்ற துணை தலைவர் கே.என்.எல் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை ஆளுனர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார் . செயலாளர் முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். காவேரி மருத்துவமனையின் இருதவியல் துறை மருத்துவர்கள், செவிலியர்கள், ஈசிஜி, எக்கோ இயக்குனர்கள் பணியாளர்கள் உட்பட 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமற்கு வருகை புரிந்த 150க்கு மேற்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், மற்றும் உடல் பரிசோதனை செட்டப்படது.
இதில் 84 பேருக்கு ஈசிஜி பரிசோதனையும், 54 பேருக்கு எங்கோ பரிசோதனை செய்ததில் 8 பேர் இருதயவில் மேல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இவர்களின் இலவச இருதய மேல்சிகிச்சையை ரோட்டரி மாவட்டம் 3212வின் ஆளுனர் ஆலோசனையின் படி செய்ய இருக்கிறார்கள். இந்த மருத்துவ முகாமில் ரோட்டரி மாவட்ட செயலாளர் ஆறுமுகசெல்வன், துணை ஆளுனர்கள் சுந்தர்ராஜன், பால்ராஜ், குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சுபாசக்தி, சிவநாடனூர் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ரோட்டரி உறுப்பினர்கள் சந்திரன், கல்யாணகுமார், ஸ்டாலின் ஜவகர், ராதகிருஷ்ணன், சங்கரன், கார்த்திக்குமார், மீனாட்சிசுந்தரம், மருதையா, மருத்துவர் முத்தையா, குத்தாலிங்கம், காந்தி, வெங்கடேசன், முருகராஜ், கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். நிறைவாக இருதய பாதுகாப்பு முகாம் ஒருங்கினைப் பாளர் திருவிலஞ்சி குமரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.