June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

காணிக்குடியிருப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பொருள்

1 min read

Free supplies for students of residential schools

6.6.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் உண்டி உறைவிட உயர் நிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் ஆய்வு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசு வழங்கக்கூடிய விலையில்லா சீருடைகள், புத்தகப்பை, காலணிகள், மழைக்கோட், கம்பளி படுக்கை விரிப்பு, நோட்டு புத்தகம் போன்றவற்றை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பிளஸ்-1, பிளஸ்-2 மேல்நிலை வகுப்பு படிப்பதற்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *