June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1 min read

District Collector inspects paddy fields in Papanasam Thamirabarani River

6.6.2026
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் வீசப்படுவதாலும், பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதாலும் தாமிரபரணியின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறது.

இதைத் தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிதாக பொறுப்பேற்ற நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் தாமிரபரணி ஆறு மாசு அடையக்கூடிய பகுதிகளான காரையார், சொரிமுத்து அய்யனார் கோவில், மற்றும் பாபநாசம் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தாமிரபரணி ஆறு மாசு அடையாமல் இருக்க தற்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இதை தடுப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து தாமிரபரணியை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டது. ஆற்றில் கழிவுகளை போடுவது குற்றம் தான்.

அதைத் தடுப்பதற்காக நகராட்சி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஏராளமான கோவிலுக்கு வருகை தருகின்றனர் அவர்கள் நம்பிக்கையையும் பாதுகாத்து, ஆற்றையும் பாதுகாப்போம் என்றார்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *