மாஞ்சோலை பகுதியில் தொடர் மழை – மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்
1 min read
Continuous rain in Manjolai area – flooding at Manimutharu waterfall
6.6.2026
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதித்தனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தொடர்ந்து தடை நீடிக்கும் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அம்பை சரகத்திற்குள் உட்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இந்நிலை யில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய வனப்பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அருவியல் குளிக்க வனத்துறையினர் தடைவதித்துள்ளனர்.