June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சாம்பவர் வடகரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி – டிரைவர் பலி

1 min read

Driver killed in collision with unidentified vehicle on Sambhar Vadakarai

6.6.2026
தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரையில் பைக்கில் சென்ற டிரைவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்

தென்காசி அருகேயுள்ள சாம்ப வர் வடகரை மாதாங்கோவில் தெருவை சேர்ந்த அங்கப்பன் என்பவரது மகன் சுப்பிரமணி என்ற அருண் (வயது 25) இவர்
டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சாம்பவர்வடகரை பெரியகுளம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாக னம் பைக் மீது மோதியதில்
அருண் தூக்கி வீசப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகில் உளள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சாம்பவர் வடகரை சப்இன்ஸ் பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *